நெல்லை மானூர் அருகே சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர்க் காயமடைந்தனர்.
நெல்லையிலிருந்து மானூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து, அலவந்தான் குளம் பகுதியில் சென்றபோது, திடீரெனச் சாலையின் குறுக்கே மாடு ஒன்று கடந்து சென்றது.
இதனால் மாடு மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போடவே, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை, நெல்லை வடக்கு மாவட்ட பாஜகத் தலைவர் உள்ளிட்ட பாஜகவினர், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.