மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலையில் மின்கம்பம் சாய்ந்தபடி நின்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
திருமங்கலம் – மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் கடந்த ஓராண்டாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் சாலை ஓரத்தில் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீர் வாய்க்கால் பாதையில் சரி செய்யும் பொழுது மின்கம்பம் சேதமடைந்து சாலை மீது சாய்ந்தபடி நின்றது. மின் கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாகச் சாலையில் யாரும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.