அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலராடோவில் உள்ள ஃபோர்ட் மார்கன் விமான நிலையத்தில் செஸ்னா 172 விமானமும், ஃப்ளூக்ஸெக்பாவ் EA300 விமானமும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு விமானங்களிலும் தலா இரண்டு பேர் பயணித்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற மூவரும் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.