கச்சா எண்ணெய் கருப்பு தங்கம் என்றால், சிப் என்பது டிஜிட்டல் வைரம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செமிகண்டக்டர் இந்தியா 2025 மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
48-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுடன் இணைந்து செமி கண்டக்டர் உருவாக்க உலகம் தயாராக உள்ளதாகவும், செமிகண்டக்டர் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் என்றும் கூறினார்.
இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் மோடி கூறினார்.