கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டரை லட்சம் பேர் வெள்ளதால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கர்ப் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் அமிர்தசரஸில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.