திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டம் நடத்தினர்.
ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளைப் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என அனுப்பபட்ட நோட்டீஸுக்கு இன்றளவும் அன்புமணி பதில் கூறாததால் 9 பேர்க் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் அன்புமணி மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை நோட்டீஸ் மூலம் தயார்ச் செய்து ராமதாஸுக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், கருத்து கேட்பது தொடர்பாகவும் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.