உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி அருகே பள்ளி வகுப்பறையில் பதுங்கியிருந்த பாம்பினை பாம்பு பிடி வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.
கலான் கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் தரைப் பகுதியில் பாம்பு பதுங்கியிருந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற பாம்பு பிடி வீரர்கள் தரையை உடைத்துப் பதுங்கியிருந்த பாம்பை மீட்டனர். தொடர்ந்து அந்தப் பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.