சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர். முதியவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளும் மற்ற மாணவர்கள்.
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு ஏற்ப 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில், படிப்பின் மீது ஏற்பட்ட ஆசைக் காரணமாக சீர்காழி அருகே உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
வடலூர்ப் பகுதியில் இருந்து புத்தூர் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிக்குத் தோளில் புத்தகப் பையைச் சுமந்து செல்லும் செல்வமணியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
மற்ற மாணவர்களுக்கு ரோல் மாடலாகத் திகழும் செல்வமணியைக் கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.