வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!
Sep 12, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல்லில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் திமுக வழங்கிய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என வெற்றிலை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அழிவை நோக்கி நகரும் வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் அடுத்த பரமத்திவேலூர், பொன்மலர் பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைச் சாகுபடி நடைபெற்று வருகிறது.

வெற்றிலைச் சாகுபடியில் ஈடுபட்டும் வரும் விவசாயிகளில் 90 சதவிகிதம் பேர் குத்தகை நிலத்திலேயே சாகுபடி செய்து வரும் நிலையில், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த வெற்றிலை விவசாயத்தை மேம்படுத்தவோ, விவசாயிகளுக்கு உதவவோ தமிழக அரசு எந்ததிட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக வெற்றிலை அனுப்பப்பட்ட நிலையும், படிப்படியாகக் குறைந்து வருவதால் விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்தும் நிறைவேற்றாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிக மருத்துவக் குணம் கொண்ட வெற்றிலையில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முன்வரவேண்டும் என்பதோடு, அழியும் தருவாயில் உள்ள வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மற்ற சாகுபடிக்கு வழங்கப்படுவதைப் போல வெற்றிலைச் சாகுபடிக்கும் கடன் உதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு தேர்தலுக்கு முன்பாகத் திமுக அளித்த வெற்றி ஆராய்ச்சி நிலைய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், அதனை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் காவிரிக்கரை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn agricultureFarmers in agony: Betel farming heading for extinctionவேதனையில் வாடும் விவசாயிகள்வெற்றிலை விவசாயம்
Share
Tweet
SendShare
Previous Post

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

Next Post

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies