சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது திறமையால் பல்வேறு உச்சங்களைத் தொட்டு வருகிறார். மேலும், பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஒருவரின் வெளித்தோற்றத்தைக் கொண்டு அவரின் திறமையை எடைபோடும் தவறான அணுகுமுறை உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. நிறத்தைக் கொண்டு, உருவத்தைக் கொண்டு, உடையைக் கொண்டு, குடும்ப பின்னணியைக் கொண்டு ஒருவரை மதிப்பிட முயல்வது எப்போதும் தவறாகதான் முடியும்.

இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார், ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ். வெறும் 3.2 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர், தனது துறையில் எட்டி பிடிக்காத உயரங்களே இல்லை. உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்த இவர், மிகவும் புகழ்பெற்ற வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பயின்றார்.

தந்தை ராணுவத்தில் பணியாற்றியதாலும், தாய் பள்ளி முதல்வராக இருந்ததாலும் ஆர்த்தி டோக்ராவைச் சிறு வயதுமுதலே துணிச்சலான பெண்ணாக வளர்த்தனர். உயரம் குறைவாக உள்ளதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையையும் நீக்கினர்.

பள்ளி படிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பொருளாதாரப் பட்டம் பெற்ற ஆர்த்தி டோக்ரா, இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடிவெடுத்தார். அவரது உயரத்தைக் கொண்டு பலர் அவரைச் சாதாரணமாகத்தான் எடைப் போட்டார்கள். இருப்பினும் முழுமூச்சாகப் படித்த அவர் முதல் முயற்சியிலேயே, ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார்.

தான் பணியாற்றிய மாவட்டங்களில் எல்லாம் முன்மாதிரியான பல திட்டங்களை அவர்  கொண்டு வந்தார். குறிப்பாக, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் ஆஜ்மீரில் அவர்  கொண்டு வந்த “புக்கா டாய்லெட்” திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்து அந்தத் திட்டம் குறித்து அறிந்து சென்றனர்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலின்போது அஜ்மீர் மாவட்ட தேர்தல் ஆணையராகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, கடந்த 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதையும் அவர்  பெற்றார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக அவர்  தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படி, தனது சாதனைகளால் பலருக்கு அவர் ரோல்மாடலாக விளங்கி வருகிறார் . மேலும், உயரத்தைக் காரணம் காட்டி விமர்சித்தவர்களும் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கும் உயர்ந்துள்ளார் ஆர்த்தி டோக்ரா.

Tags: ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ்iasராஜஸ்தான்Height is no barrier to achievement: A female officer who has reached the pinnacle through her activitiesபெண் அதிகாரிஆர்த்தி டோக்ரா
Share
Tweet
SendShare
Previous Post

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Next Post

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies