செப்டம்பர் 13ஆம் தேதி பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் பைராபி – சாய்ராங் இடையே 51 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இது அசாமின் சில்சார் வழியாக மிசோரமை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்த ரயில் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக வரும் 13ஆம் தேதி பிரதமர் மோடி மிசோரம் செல்கிறார்.
அன்றைய தினமே மணிப்பூருக்கு, பிரதமர் மோடி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் கலவரம் நடைபெற்ற பிறகு, முதல்முறையாகப் பிரதமர் மோடி அங்கு செல்லவுள்ளதால், இந்தப் பயணம் கவனம் பெற்றுள்ளது.