சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, 7 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் புதிய உரத் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. இது நாட்டை இறக்குமதி சார்பு நிலையில் இருந்து ஏற்றுமதியை நோக்கி தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய நாடான இந்தியா, உரங்களின் தேவையை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை, ரஷ்யா, சீனா,மொராக்கோ, ஓமன் மற்றும் சவுதி அரேபியா நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

குறிப்பாகச் சீனாவிடம் இருந்து மட்டும் 80 சதவிகித அளவுக்கு உரங்களை வாங்குகிறது… தற்போது ரஷ்யாவிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 33 சதவிகிதம் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வருகிறது.

உள்நாட்டுத்தேவையைப் பூர்த்தி செய்யவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் இந்தியா, உரத் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஏழு ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீரில் கரையக்கூடிய உரத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

சுரங்க அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய மூலப்பொருட்கள் மற்றும் தாவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு உரங்கள், இந்தியாவின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இந்தியாவை ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என்றும் Soluble Fertilizer Industry Association தலைவர் ராஜீப் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.

சிறப்பு உரத் தேவைக்குச் சீனாவையே இந்தியா முழுமையாக நம்பியிருக்கக் கூடிய நிலை உள்ளதாகவும், 95 சதவிகிதம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கிருந்து பெறப்படுவதாகவும் ஆய்வறிக்கைக் கூறுகிறது. 2005ம் ஆண்டு ஐரோப்பிய விநியோகஸ்தர்கள், இந்திய தேவைக்காகச் சீன உரங்களைக் கொள்முதல் செய்தபோது, சீன நிறுவனங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஆதிக்கம் செய்யத் தொடங்கின.

தற்போது இந்தியாவின் புதிய உரத் தொழில்நுட்பம் பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வரும் என்றும், உரத் தயாரிப்புக்காகப் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஜ்ஜிய கழிவுநீர், உமிழ்வு இல்லாத காரணத்தால்தான், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உரங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்றும், இறக்குமதி சார்பு நிலையைக் குறைத்து இந்தியாவை உர ஏற்றுமதி நாடாக உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: மேக் இன் இந்தியாIndiachinaPlan to reduce Chinese fertilizer imports: A new revolution in Make in Indiaசீன உர இறக்குமதி
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

Next Post

மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies