சீனாவின் ரகசிய திட்டம் - முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 09:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை உருவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா தடையாக இருக்கிறது. அதற்கான காரணம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் இந்தியா ஏற்படுத்திய தாக்கம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் இந்தியாவுக்குக் கொடுத்த முக்கியத்துவமே அதற்குக் காரணம். விளாடிமிர்ப் புதினும், ஸி ஜின்பிங்கும் பிரதமர் மோடியுடன் காட்டிய நெருக்கம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

என்னதான் நண்பராக இருந்தாலும் சீனாவின் சில செயல்களுக்கு இந்தியா ஆதரவு கொடுப்பதில்லை. அதில் ஒன்றுதான் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி. ஷாங்காய் மற்றும் பிரிக்ஸ் அமைப்புகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் திருப்ப நினைக்கிறது சீனா.

ஒத்த சிந்தனைகொண்ட ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட தேசங்களைத் தங்களது லாபத்துக்காகப் பயன்படுத்த சீனா முயல்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்காத அமைப்புகளை அவற்றுக்கு எதிராகத் திருப்ப இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.

ஷாங்காய் மற்றும் பிரிக்ஸைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் அவற்றை மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகக் களமிறக்கலாம் என்று சீனா திட்டம் போடுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் பார்வை வேறாக இருக்கிறது.

பிரிக்ஸ் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தபோதும் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் டாலருக்குப் போட்டியாக BRICS CURRENCY-ஐ கொண்டுவரும் எண்ணமும் இல்லை என்பதை இந்தியா தெளிவுப்படுத்திவிட்டது.

உலக அளவிலும் ஆசிய கண்டத்திலும் மிகவும் வலிமை வாய்ந்த நாடாக இருக்கும் இந்தியா ஷாங்காய், பிரிக்ஸ் மற்றும் குவாட் உள்ளிட்ட அமைப்புகளில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தெற்குலகத் தேசங்களை மேம்படுத்துவது மட்டுமே இந்தியாவின் குறிக்கோள்.

அதற்கு மாறாகச் சீனா செயல்படுமேயானால் மேற்குக்கும் தெற்குக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் பாலமாக இந்தியா விளங்கும் என்கிறார்கள் புவிசார் அரசியல் வல்லுநர்கள். தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா கூடிய விரைவில் வல்லரசாக மாறிவிடும் என்பதால் அதற்கு முன்பே துண்டுபோட்டு இடம்பிடிக்கப் பார்க்கிறது சீனா. ஆனால் அது நடக்கப்போவதில்லை.

Tags: சீனாவின் ரகசிய திட்டம்Indiatoday newschina newsChina's secret plan - India nipped it in the bud
Share
Tweet
SendShare
Previous Post

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

Next Post

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies