இந்தியா – ரஷ்யா உறவை மதிப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
சீனத் தலைவர் பெய்ஜிங்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்துப் பேசினார்.
அப்போது ரஷ்யா உடன் வலுவான உறவைப் பேண விரும்புவதாகக் கூறிய பாகிஸ்தான் பிரதமர், பிராந்திய முன்னேற்றத்திற்கு அது உதவும் என்று தெரிவித்தார். இந்தியா – ரஷ்யா உறவுகளைப் பாகிஸ்தான் மதிப்பதாகவும் அவர் கூறினார்.
அதன்தொடர்ச்சியாகப் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆசியாவில் பாகிஸ்தான் தங்களது பாரம்பரிய கூட்டாளியாக தொடர்வதாகக் கூறினார். ரஷ்யா – பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மதிப்பதாகவும் புதின் தெரிவித்தார்.