குரோஷியாவில் நடைபெற்ற பலூன் பந்தயம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
குரோஷியாவின் வடக்கு நகரமான பிரிலாக்கில் ஆண்டுதோறும் ராட்சத பலூன் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பந்தயம் கோடைகால நிகழ்வுகளில் ஒன்றாகக் கோலாகமாக நடத்தப்பட்டு வருகிறது.
போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் பங்கேற்று வண்ண, வண்ண ராட்சத பலூன்களைப் பறக்க விட்டனர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தப் போட்டியை ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர்.