விஷாலின் மகுடம் படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார்.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாகத் துஷாரா விஜயன் நடிக்கிறார்.
அஞ்சலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.