வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்கக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர்க் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதில் தனியார் வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ்க் கடந்த 11 ஆண்டுகளில் 56 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், அவற்றில் 56 சதவீதக் கணக்குகள் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.