செமிகான் சர்வதேச மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.
டெல்லியில் உள்ள யஷோ பூமியில் செமிகான் சர்வதேச மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
350 கண்காட்சியாளர்கள் ஆயிரத்து 100 அரங்குகளை அமைத்துள்ள நிலையில், மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள சிப்களின் தொழில்நுட்பம் குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.