வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 3, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த முக்கிய கேள்விகளுக்குத் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தாம் மூன்று நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, Knorr-Bremse நிறுவனத்தைப் பற்றி மட்டுமே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Nordex India Manufacturing Pvt Ltd, Ebmpapst India ஆகிய மற்ற இரு நிறுவனங்களைப் பற்றி ஏன் பதிலளிக்கவில்லை? என்று வினவியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு முதல் Ebmpapst India நிறுவனமும், 2020ம் ஆண்டு முதல் Nordex India நிறுவனமும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன என்பதை அமைச்சரால் மறுக்கமுடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை மட்டும் அனுப்பி, 7 லட்சம் கோடி முதலீடுகளை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஈர்த்த நிலையில், ஆறு முறை வெளிநாட்டிற்குச் சென்றும் சில ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈர்த்துள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இதுவரை எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர்  தயங்குவது ஏன் என்றும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் தவறைச் சுட்டிக்காட்டினாலே தமிழகத்தை இழிவுபடுத்திவிட்டதாகத் திசைத்திருப்புவதுதான் திராவிட மாடலின் வழக்கம் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, திரும்பத் திரும்ப திசைத்திருப்புவதை விட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Tags: MK StalinNayanar Nagendran mlaWhy do most of the contracts signed for foreign trips remain on paper? - Nainar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

செமிகான் சர்வதேச மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி

Next Post

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Related News

வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த கார்!

வேலூர் : மூலவர் வெங்கடேச பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

இந்தியாவுடன் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவு கொள்கை தேவை : பின்லாந்து அதிபர் வலியுறுத்தல்!

இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்

பாகிஸ்தான் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி!

இந்தோனேசியாவில் 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருப்பூர் : குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies