அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு ஜானிக் சின்னர் முன்னேறியுள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான இப்போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார்.
இதில் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாவுர், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி ஆகியோர் வெற்றிப் பெற்று காலிறுதியில் நுழைந்தனர்.