ஆம்பூர் அருகே குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் செயல்பட்டு வரும் டாஸ்டாக் கடையில் மது அருந்துபவர்கள் மதுபாட்டிகளை விளைநிலத்தில் வீசி செல்வதாகக் குற்றச்சாட்டப்படுகிறது.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, கடையை இடமாற்றம் செய்யக் கோரி ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
டாஸ்மாக் கடையை விரைந்து இடமாற்றம் செய்யாவிட்டால் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.