தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பட்டியலினப் பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை வழங்காமல் நிற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு பகுதியில் வளரிளம் பருவத்தினர் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர், தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில், பேரூராட்சி தலைவிக்கு இருக்கை வழங்காமல் அமைச்சருக்குப் பின்புறம் நிற்க வைத்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மணலாறு பகுதியில் தடையை மீறி திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.