சென்னை ஆலந்தூரில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
வேளச்சேரியைச் சேர்ந்த டோமினிக் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்த உறவினரை விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது ஆலந்தூர் நீதிமன்றம் அருகே திடீரெனக் காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது.
இதனையடுத்து அதிலிருந்தவர்கள் கீழே இறங்கிய நிலையில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர்த் தீயை அணைத்தனர்.