இந்தோனேசியாவில் இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமான நிலையில், அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, 8 பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று மத்திய கலிமண்டன் மாகாணத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
ஹெலிகாப்டர் பறக்கத் துவங்கிய 8 நிமிடங்களில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாயமான ஹெலிகாப்டரை, இந்தோனேசியாவின் காவல்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 140 வீரர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.