ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தன்னை ஏமாற்றிவிட்டதாக டிரம்ப் நினைப்பதாக, அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததும், பாதிப்பைத் தாங்க முடியாத பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது.
இதனையடுத்துப் போர் நிறுத்தப்படவே, இதற்குத் தான்தான் காரணம் என டிரம்ப் தம்பட்டம் அடிக்கத் தொடங்கினார்.
இதனை இந்தியா ஏற்க மறுத்த நிலையில், இந்தியா தன்னை ஏமாற்றி விட்டதாக டிரம்ப் நினைப்பதாக என ஆஷ்லே ஜே. டெல்லிஸ் தெரிவித்துள்ளார்.