இந்தியாவுடன் கூட்டுறவு மற்றும் கண்ணியமான வெளியுறவு கொள்கைத் தேவை என்று டொனால்ட் டிரம்பின் நண்பரும், பின்லாந்து அதிபருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்காகப் பிரதமர் மோடி சீனாவுக்குச் சென்றார்.
அங்கு அவரும், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் சிரித்துப் பேசியபடி காணப்பட்டனர். 3 பேருக்கிடையே நிலவிய நெருக்கம், அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ உள்ளிட்டோர் மோசமான கருத்துக்களைக் கூறினர்.
இந்தச் சூழலில், இதுகுறித்துப் பேசிய பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், இந்தியாவுடன் கூட்டுறவு மற்றும் கண்ணியமான வெளியுறவுக் கொள்கைத் தேவை என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் மேற்கு நாடுகளுக்குக் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.