கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி - வலிமை அடையும் உறவு!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பைக் கூடுதலாகக் கொள்முதல் செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மூத்த ரஷ்ய அதிகாரி தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியா-ரஷ்யா நீண்டகாலமாகவே ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாட்டின் மொத்த ஆயுத இறக்குமதியில் 36 சதவீதம் ரஷ்யாவின் பங்காகும்.

T-90 பீரங்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கிக் கப்பல், ஏகே-203 ரகத் துப்பாக்கிகள் என இரு நாடுகளும் இணைந்து பல முக்கிய ராணுவத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மிக வெற்றிகரமாகச் செயல்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூடுதலாக S-400 அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி,பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூறில், இந்திய விமானப்படை ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை  சுட்டு வீழ்த்தியதாக, விமானப்படைத் தளபதி A P சிங் தெரிவித்திருந்தார். மேலும் ரஷ்யத் தயாரிப்பான S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஒரு “game-changer” என்றும் கூறியிருந்தார்.

S-400 ஏவுகணை அமைப்பானது, அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை விட அதிகத் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. S-400 ஒரு நகரும் வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். அதாவது சாலை வழியாக இதனைக் கொண்டு செல்ல முடியும். உத்தரவிடப்பட்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.

முன்னதாக, சீனா மற்றும் பாகிஸ்தானின் வான் வழி அச்சுறுத்தலுக்கு எதிராகத் தனது வான் பாதுகாப்பை உறுதி படுத்தும் விதமாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க ஒப்புக்கொண்டது. 2018 ஆம் ஆண்டு, இதற்காக 5.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

S-400 ஐந்து தொகுப்புகளுக்கான ஒப்பந்தத்தின் படி, ஏற்கெனவே ரஷ்யா 3 தொகுப்புகள் S-400 யை வழங்கியுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுப்புகள் 2026-27 க்குள் வழங்கப்படும் என்று ரஷ்யா உறுதியளித்துள்ளது.

சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவைச் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பு, இருநாடுகளுக்குமான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்தச் சூழலில், தற்போது கூடுதலாகப் புதிய S-400 அமைப்புகளை வாங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இத்தகவலை, ரஷ்யாவின் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான தலைவர் (Dmitry Shugaev) திமித்ரி ஷுகயேவ் உறுதி படுத்தியுள்ளார்.

கூடுதல் S-400 அமைப்புகளுக்கான புதிய பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவக் கூட்டணியை மேலும் பல படுத்தும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது நாட்டின் தேசிய உரிமை என்று கூறிய இந்தியா அமெரிக்காவின் வரிவிதிப்பு நியாயமற்றது என்று கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்தியா அடிபணியவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையிலும் ரஷ்யா மேலும் சலுகை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​செப்டம்பரில் இந்தியாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் விநியோகம் 10 முதல் 20 சதவீதம் – அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: S-400 வான் பாதுகாப்புIndia - russiaAdditional S-400 air defense: Russia confirms to India - relationship to grow strongerஇந்தியாவிற்கு ரஷ்யா உறுதி
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

Next Post

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies