வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மலையாளிகள் சங்கத்தினர் ஒண்றிணைந்து அத்தப்பூ கோலமிட்டும், திருவாதிரை நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கொண்டாட்டம் களைகட்டியது.
வடசென்னை மலையாளிகள் சங்கத்தினர் ஒண்றினைந்து ஓணம் பண்டிகையை ஆடல், பாடலுடன் கொண்டாடினர். அத்தப்பூ கோலமிட்டும், திருவாதிரை நடனமாடியும் பண்டிகையை வரவேற்றனர்.