திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார்க் கோயிலில் வருடாந்திரப் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார்த் திருமஞ்சனம் நடைபெற்றது.
பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை வருடாந்திரப் பவித்ரோற்சவம் நடக்கிறது.
இதனால் கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனைப் பொருட்கள் கலந்த புனித நீர் தெளிக்கப்பட்டது.
மேலும் வருடாந்திரப் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு நாளை முதல் 7ம் தேதி வரைக் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவற்றைத் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.