52 வயது காதலியை 26 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆக்ராவை சேர்ந்த அருண் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.
52 வயதான ராணி, தனது வயதை மறைத்து Filter மூலம் புகைப்படத்தைப் பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.
முதல்முறையாக ராணியை அருண் நேரில் சந்தித்தபோதே அவருக்கு 52 வயது என்பதும், 4 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
பின்னர் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை கழுத்தை நெரித்து கொலைச் செய்தார். கொல்லப்பட்ட ராணியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அருணை கைது செய்தனர்.
















