ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செனாப் நதி நிரம்பி கரைபுரண்டு ஓடுவதால், அக்னூரில் உள்ள கோட்லி பகுதியில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பயிர்கள், வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.