ஜிஸ்டி வரி சீர்திருத்தம் மூலம் வரலாறு காணாத வரிக் குறைக்கப்படுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் கூறியிருந்ததைப் போலவே தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஓர் இன்பச் செய்தியாக ஜிஎஸ்டி வரியைக் குறைத்து நாட்டு மக்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், பெண்கள், சிறு-குறு வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் உள்ள இந்த வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பை அமல்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.