ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் விவேகானந்த கேந்திரம் சார்பில் உலக நன்மைக்காவும், ராமநாதபுரத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கிற்கு பூஜை செய்தனர்.