தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக கலைவாணி பணியாற்றி வந்தார். இவர் அவ்வப்போது மாணவர்களை பணிவிடை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியை கலைவாணி மேசையில் படுத்துக் கொண்டு தனது கால்களை மாணவர்களை அமுக்க வைத்த வீடியோ வெளியானது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அவரை பணியிட மாற்றம் செய்தது. இதனிடையே பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தலைமை ஆசிரியை கலைவாணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டார்.