மனைவிக்கு அதிக சொத்துக்களும், வருமானமும் இருக்கும்பட்சத்தில் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னயை சேர்ந்த மருத்துவ தம்பதியினர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவி மற்றும் மகனுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவிக்கு அதிக சொத்துக்களும், வருமானமும் இருக்கும்பட்சத்தில் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை எனக்கூறி குடும்பலநல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். அதே நேரத்தில், மகனுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட குடும்ப நல நீதிமன்ற உத்தரவில் தலையிடவில்லை என நீதிபதி தெரிவித்தார்.