டென்னிஸ் வீரர் ஜோகோவிச், டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6 க்கு 3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7 க்கு 5 எனக் கைப்பற்றினார்.
முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்தச் செட்டை 6 க்கு 3 எனக் கைப்பற்றினார். இருந்த போதிலும் 4ஆவது செட்டில் ஈடுகொடுக்க முடியாததால் ஜோகோவிச் வெற்றிப் பெற்றார்.
இதனைதொடர்ந்து மகள் தாராவின் பிறந்த நாளை ஒட்டியும், வெற்றிப் பெற்றதை கொண்டாடும் வகையிலும், டென்னிஸ் கோர்ட்டில் ஜோகோவிச் நடனமாடினார்.