இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா்கள் தொடா்ந்து முதலிடம் வகிக்கின்றனா்.
2024-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 609 பேர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
நடப்பாண்டில் இதே காலகட்டத்தில் இலங்கைக்கு 1 லட்சத்து 98 ஆயிரத்து 235 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனா் என்று அந்நாட்டுச் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் இந்தியர்கள் மட்டும் 46,473 பேர். இந்தியாவுக்கு அடுத்தபடியாகப் பிரிட்டனில் இருந்து 17 ஆயிரத்து 764 பயணிகளும், ஜொ்மனியில் இருந்து 12 ஆயிரத்து 500 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேப்போன்று சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பலா் இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.