பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தற்கொலைப் படை தாக்குதலால் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் மகன் அக்தர் மெங்கல் உயிர் தப்பினார்.
தாக்குதலில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.