கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஸ்விக்கி நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை 14 ரூபாயாக உயர்த்திய நிலையில், சொமேட்டோ நிறுவனமும் பயன்பாட்டுக் கட்டணத்தை 12 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு சொமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபந்தர் கோயல் பயன்பாட்டுக் கட்டணம் முறையாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி 2023 ஆகஸ்ட்டில் 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சொமேட்டோ நிறுவனம் பலமுறைப் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியது.
கடந்தாண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக் கட்டணத்தை 4 ரூபாயாககவும், அக்டோபரில் 7 ரூபாயாகவும் உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 2 ரூபாய் உயர்த்தப்பட்டுப் பயன்பாட்டுக் கட்டணம் 10 ரூபாயாக அறிவித்தது.
இந்த நிலையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீண்டும் 2 ரூபாய் உயர்த்தி 12 ரூபாயாகப் பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உணவு டெலிவரி துறையின் வளர்ச்சியே, பயன்பாட்டுக் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது