சென்னை சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் வடிகால்வாய் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
ஸ்ரீ ராமாபுரம், பஜனைக் கோவில் தெரு, பெரியார்ப் பாதை உள்ளிட்ட இடங்களில் 4 மாதங்களுக்கும் மேலாக வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எச்சரிக்கைப் பலகையோ, பாதுகாப்பு வேலியோ வைக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டு வடிகால்வாய் பணிகளை முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.