நடிகர் நஸ்லேன், கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ள லோகா திரைப்படம், வெளியான 7 நாட்களில் உலகளவில் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
வெளியான நாள் முதலே லோகா படம், மலையாளத் திரையுலகில் தொடர்ந்து வசூல் சாதனைப் படைத்து வருகிறது.
ஓபனிங் வசூல், வாரயிறுதி வசூல் என அடுத்தடுத்த சாதனைப் பட்டியலில் இடம்பெற்று வந்த லோகா திரைப்படம், தற்போது 100 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இதனைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.