சென்னையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் 3 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக டேவிட் மனோகர் என்பவர்ச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், மழைநீர் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால், பருவமழை காலங்களில் அதிகப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவானது தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவிட்டும், 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான விவகாரத்தில் 3 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.