கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அடகு வைத்த நகையை மீட்க சென்ற நபர் ஒருவரை தனியார் நிறுவன ஊழியர்கள் அறையில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த சுபுநாத் என்பவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்க சென்றுள்ளார்.
அப்போது அவர் அலைக்கழிக்கப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுபுநாத்தின் தொலைபேசியைச் சேதப்படுத்திய ஊழியர்கள் அவரை அறையில் வைத்து பூட்டினர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.