திரைப்பட நடிகர் சரவணன் அடித்து துன்புறுத்துவதாக அவரது முதல் மனைவி, ஆவடி காவல் ஆணையர் அலுவலக்தில் புகார் மனு அளித்துள்ளார்.
நடிகர் சரவணன் அவரது 2 மனைவிகளையும் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இவர் தனது 2வது மனைவி ஸ்ரீதேவியுடன் வசித்து வரும் நிலையில், இருவரும் சேர்ந்து முதல் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வதாகவும், அவரை தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், 2வது மனைவியை திருமணம் செய்தபோது பராமரிப்பு தொகையாக 40 லட்ச ரூபாய் தருவதாக உறுதியளித்த சரவணன் அதனையும் தராமல் ஏமாற்றியதாக முதல் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையகரத்தில் புகார் மனு அளித்த அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சரவணன் மற்றும் அவரது இரண்டாம் மனைவிதான் காரணம் என தெரிவித்தார்.