டெல்லியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அலிப்பூர் அருகே உள்ள என்.ஹெச் 44 தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு விபத்தில் சிக்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற டெல்லிக் காவல்துறையினர், போக்குவரத்தைத் திருப்பிவிட்டு, தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.