அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ISCHEMIC STROKE பாதிப்பு இருப்பதாகச் செய்தி வெளியாகும் நிலையில், இந்த நோயின் தாக்கம் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..!
பொதுவெளியில் தோன்றுவதிலும், ஊடகங்களுக்குப் பேட்டிகொடுப்பதிலும் ஆர்வம் கொண்டவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த வாரம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். ட்ரம்ப்பின் இந்தச் செயலால், அவரைக் கொடிய நோய் தாக்கி இருப்பதாகச் செய்தி வெளியானது.
வெளிநாட்டுப் பயணங்களை அவர்க் குறைத்து கொண்டதற்கும் இதுவே காரணம் எனப் புரளி கிளம்ப, ISCHEMIC STROKE எனும் கொடிய நோயால் அவர்ப் பாதிப்பட்டிருப்பதாக இணையத்தில் பேசப்பட்டது.
தனக்கு ஒரு பாதிப்பும் இல்லை என அதிபர் ட்ரம்பே நேரடியாக விளக்கம் அளித்த போதும், வதந்தி மட்டும் நின்றபாடில்லை. ட்ரம்பிற்கு ISCHEMIC STROKE பாதிப்பு உள்ளதாக ஒருபுறம் செய்தி பரவியிருக்க, அது என்ன ISCHEMIC STROKE பாதிப்பு என அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் இணையத்தை அலசி ஆராயத் தொடங்கியுள்ளனர்.
மருத்துவர்களோ, இது மூளை செல்களை சாகடிக்கும் கொடிய நோய் என விளக்கம் அளித்துள்ளனர். ISCHEMIC STROKE பாதிப்பால் மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டு ஆக்ஸிஜன் ஓட்டம் நின்றுவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள், இறுதியாக மூளைச் செல்கள் இறந்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நோயின் தாக்கத்தைச் சுலபத்தில் கண்டறிய முடியாது என்றும், சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் பாதிப்பைக் குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளனர். முகம் ஒரு புறம் உணர்வின்றி இருப்பதும், கைகள் உணர்வின்றிக் காணப்படுவதும், தடுமாறி தடுமாறி பேசுவதும் இந்த நோய்க்கான அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்பார்வை இழப்பு, மயக்கம், குழப்பம், தீராத தலைவலி ஆகியவையும் SCHEMIC STROKE பாதிப்புக்கான அறிகுறிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நோய் பாதிப்பை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவது சற்று கடினம் என்றாலும், ரத்த ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்கான TISSUE PLASMINOGEN ACTIVATOR மருந்தை நான்கரை மணி நேரத்திற்குள் செலுத்தினால் பாதிப்பைக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.
MECHANICAL THROMBECTOMY அறுவைச் சிகிச்சை மூலமும் மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க முடியும் எனக் கூறுகின்றனர். ISCHEMIC STROKE பாதிப்பில் இருந்து நிரந்தரமாக விடுபட உடற்பயிற்சி, பேச்சுபயிற்சி ஆகியவைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம், கொழுப்புகளைக் கட்டுக்குள் வைப்பதன் மூலமும், சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமும் ISCHEMIC STROKE பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.