ஜிஎஸ்டி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, இந்திய பொருளாதாரம் குறித்து மோசமாக பேசிய டிரம்ப்பின் கருத்தைச் சுட்டிக்காட்டி Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜிஎஸ்டி சீர்திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிப்பதாகக் கூறியுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்பிற்கு, இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் காண்பிப்பதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.