லண்டனில் உள்ள விக்டோரியா நிலையம் அருகே இரண்டடுக்குப் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர்.
வில்டன் சாலைக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைச் சாலைக்கும் இடையே இந்த விபத்து நேரிட்டது. சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.