கிருஷ்ணகிரி மாவட்டம் மேக்கலாம்பட்டியில் புயலால் சேதமடைந்த சாலைச் சீரமைக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு வீசிய பெஞ்சல் புயல் காரணமாக மேக்கலாம்பட்டியில் சாலையின் பக்கவாட்டுப் பகுதி பெயர்ந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தச் சாலையை சீரமைக்கப் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இன்றளவும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் அச்சத்துடனேயே சாலையைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட சாலையை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.