நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு - யாருக்கு என்ன பலன்?
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்குப் பின்பான வரி குறைப்பு வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .

சுதந்திரத் தின உரையில் பிரதமர் மோடி, இந்த ஆண்டு, தீபாவளிக்குள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கும் வகையில் GST 2.0 சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து, பிரதமர்  தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய ஜிஎஸ்டி வரியை நீக்கிவிட்டு 5 சதவீதம், 18 சதவீதம் என்ற இரண்டு வரி விகிதங்களை மட்டுமே பின்பற்ற பரிந்துரை  செய்யப்பட்டது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முன்மொழிவை, மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பியது. இந்த முன்மொழிவுக்கு ஆகஸ்ட் 20 மற்றும் 21ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பைக் குறைக்க வலியுறுத்திய மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

GST 2.0-வில் ஏற்கெனவே 12 சதவீத வரியின் கீழ் இருந்த 99 சதவீதப் பொருட்கள், 5 சதவீத வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 28 சதவீத வரியின் கீழ் இருந்த 90 சதவீதப் பொருட்கள் 18 சதவீத வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பென்சில்,பேனா,ரப்பர், கிரையான்ஸ் உள்ளிட்ட எழுது பொருட்கள், வரைபடங்கள், நோட்டுகள், மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர்  காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ரொட்டி மற்றும் பரோட்டா உட்பட அனைத்துப் பாரம்பரிய இந்திய ரொட்டிகளுக்கும், அவற்றின் வகைகளுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில் சாக்லேட்,பேரீச்சம்பழம், நூடுல்ஸ், வெண்ணெய், நெய், பால் பவுடர், வெண்ணெய், condensed milk மற்றும் சோப் ,ஷாம்பு,டூத் பேஸ்ட் ,டூத் பிரஷ்,ஹேர் ஆயில் போன்ற பொருட்களும் தையல் மிஷின் மற்றும் அதன் பாகங்களும் 5 சதவீத வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் உட்பட நொறுக்குத்தீனிகளும், காலணிகளும் துணிமணிகளும் இந்த 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரப் பட்டுள்ளன.

விவசாயத் துறையில், ட்ராக்டர் டயர்கள் மற்றும் அதன் பாகங்கள் 18 சதவீத வரியிலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ட்ராக்டர்கள், உயிர்ப்பூச்சிக் கொல்லிகள், நுண்ணூட்ட சத்துக்கள், சொட்டுநீர்ப்பாசன அமைப்புகள்,உரங்கள் ஆகியவை 12 சதவீத வரி வரம்பில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் தெர்மாமீட்டர், மருத்துவ ஆக்சிஜன், நோயறிதல் KIT, குளுக்கோமீட்டர்,சோதனை அட்டைகள் எனப்படும் MEDICAL STRIPS ஆகியவையும் 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப் பட்டுள்ளன. 28 சதவீத வரி அடுக்கு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதால், அதன் கீழ் வந்த அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏசி, டிவி, டிவி மானிட்டர்கள்,புரொஜெக்டர்கள்,செட் அப் பாக்ஸ், வாஷிங் மெஷின், டிஷ் வாஸர், ஃபிரிட்ஜ் , சிறிய வகையிலான கார்கள் மற்றும் குறைந்த இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டதால் அவற்றின் விலைக் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதே நேரத்தில், புகையிலை, குட்கா, பான் மசாலா குளிர்பானங்கள் மற்றும் குறிப்பிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஜிஎஸ்டி 2.0 வரி சீர்திருத்தம். ஒருமனதாக எடுக்கப் பட்டுள்ளது.

பொருட்களுக்கான வரி குறைப்பால் அரசுக்கு 93,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 40 சதவீத வரி அடுக்கில் இருந்து அரசுக்கு 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

GST 2.0 சீர்திருத்தத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலைக் கணிசமாக குறையும். மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். மக்களிடையே வாங்கும் சக்தியும் நுகர்வுபழக்கமும் அதிகரிக்கும் என்பதால், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

இந்த வரி குறைப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும், குறிப்பாகச் சிறு வணிகர்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: தீபாவளி பரிசாக GST குறைப்புஎன்ன பலன்?GST news todayPM ModiBJP Nirmala Sitharaman56th GST meetingExcitement is spreading across the country: GST reduction as a Diwali gift - who benefits and what?
ShareTweetSendShare
Previous Post

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

Next Post

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies